வாயிற்காவலன்

கூட்டம் பெருகிவிட்ட

சிற்றுண்டி நிலையத்தில்

வருபவர்களை

வாயிலில் காக்கவைத்து

உள்ளிருக்கும்

கூட்டம் தணிந்த பின்

காத்திருப்போரை

உள்ளே விடும்

வாயிற்காவலனொருவனை பார்த்தேன்.

நிகழ்கால இருப்பை பொறுக்காமல்

நிற்காமல் நகரும் நினைவுகள்.

இறந்த கால அவஸ்தைகளை அசை போடும் ;

எதிர் காலத்தை எண்ணி

அல்லலுறும்.

உள் புகும் நினைவுகளை

வாயிலில் நிறுத்தி

பரிசோதித்து

வடிகட்டி உள்ளனுப்பும்

காவலனொருவன் எனக்கு கிடைப்பானா?

6 Comments

 1. hemgan says:

  நன்றி முத்துலெட்சுமி. உங்கள் வலைதள முகவரியை தாருங்கள்.

 2. GayathriArun says:

  உங்கள் பதிவுகளும் கவிதைகளும் நன்றாக இருக்கின்றன.
  முழுவதுமாக படிக்க இயலவில்லை.கண்டிப்பாகப் படிக்கிறேன்.
  தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்…
  நேற்றும் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

  1. hemgan says:

   உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

 3. என்பெயரை க்ளிக் செய்தாலே அது என் தளத்திற்கு செல்லும்.. 🙂 இருந்தாலும் இது தான் என் வலை முகவரி. ..www.sirumuyarchi.blogspot.in

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.