நிழலொன்று விடாமல் துரத்திக்கொண்டு வந்தது.
எங்கு போனாலும்
என்னை விடவில்லை.
நடைபாதையோரமாக
ஒதுங்கிநிற்கையில்
மறைந்துபோகிறது;
பின்னர்
நடையைத்தொடரும்போதோ
திரம்பவும் துரத்துகிறது.
இனியும்
பணிந்துபோனால்
இழுக்கு!
ஒரு கை பார்த்துவிடவேண்டும்
சடக்கென திரும்பி
நிழலை துரத்தத்துவங்கினேன்.
அதுவரை பின் தொடர்ந்து வந்து
என்னைச்சீண்டிய நிழல்
இப்போது என் வேகத்திற்கு
ஈடு கொடுத்து
என் முன்னால் ஓடுகிறது.
அந்திப்பொழுது வரை
அதனை பிடிக்கமுடியவில்லை.
ஏதொவொரு புள்ளியில்
என் பார்வையிலிருந்து
நிழல் மறைந்துபோக,
வீடு திரும்பினேன்